cinema

img

மீண்டும் அவதரிக்கப்போகும் இரண்டாம் பாகம்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்து உலகமெங்கும் பேசப்பட்ட படம் அவதார். 25 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில்  உருவாகி, 280 கோடி அமெரிக்க டாலர்களை அள்ளியதாக  வியந்து பேசப்பட்ட படம்.  அவதாரின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் மாதம் 16 அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவருகிற இந்தப் படமும் மிகச் சிறந்த காட்சி அனுபவத்தை வழங்குமென்றும் சொல்கிறார்கள். உலகமெங்கும் 160 மொழிகளில் அவதாரம் எடுக்கப்போகிறதாம் ஹாலிவுட்டின் இந்த பிரம்மாண்ட சினிமா. எளிய முயற்சிகளைக் காவு கேட்கும் இன்னொரு புயலை எதிர்கொள்ளத் தயாராகத்தான் வேண்டும் உலக சினிமா உலகம், வேறு வழி?